ஹைதராபாத்தில் 14 வயதே நிரம்பிய சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த புதன்கிழமைதான் இந்த சம்பவம் போலீஸாருக்கு தெரிய வந்தது. கடந்த 2 வருடங்களாக அந்த சிறுமி மிக கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

பள்ளி செல்லும் அந்த சிறுமி திடீரென வித்தியாசமாக செயல்பட தொடங்கி உள்ளார். அதோடு கர்ப்பமாக இருந்ததால் அவரின் வயிறும் பெரிதாக தொடங்கி உள்ளது.
இவரின் நடத்தையில் மாற்றம் இருந்ததால் பள்ளி ஆசிரியர்கள் இவரை அழைத்து விசாரிக்க தொடங்கி உள்ளனர். என்ன நடந்தது… ஏன் உன் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உன் செயல்பாடுகளிலும் மாற்றும் உள்ளதே என்று விசாரித்து உள்ளனர்.
அந்த மாணவி அழுதுகொண்டே பேசி உள்ளார். அவர் சொன்ன ஒவ்வொரு தகவலும் மாணவியின் ஆசிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. அதில்.. என் அப்பா என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அவர் தினமும் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வார்.

அவர் மூலமாக நான் கர்ப்பம் அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டதும் மாணவியின் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதையடுத்து உடனே அவர்கள் சாத்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாணவியை விசாரணை செய்த போலீசார், அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர்.
அந்த மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் என்னுடைய அம்மா 2013ல் பலியாகிவிட்டார். உடல்நிலை சரியில்லாமல் அவர் பலியாகிவிட்டார். என்ன அப்பா என்னை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டார். ஆனால் நான் வயதுக்கு வந்த பின் அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கினார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அவர் என்னை பலாத்காரம் செய்து வருகிறார். நான் வெளியே சொன்னால் என்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வருகிறார் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில் அந்த சிறுமி இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

ஆசிரியர்கள் விசாரித்ததில் இந்த உண்மை வெளியே வந்துள்ளது. இல்லையென்றால் அந்த மாணவியும் இதை வெளியே சொல்லாமலே இருந்திருப்பார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அவரின் மனைவி இறந்த நிலையில் 45 வயதான அவர், தனது 14 வயது பெண் குழந்தையை பாலியல் தேவைக்காக பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு அந்த கொடூரன், அந்த சிறுமியை மோசமாக தாக்கி கொடுமையும் படுத்தி உள்ளார்.
போக்ஸோ, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. முறையான பரிசோதனைக்கு பின் அந்த சிறுமிக்கு கரு கலைக்கப்படும், என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்