அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது.
- Advertisement -

மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று நீதி ,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது