டிக்-டாக் என்ற செயலியின் மோகம் தற்கால யுவதிகளிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த செயலியில் இளைஞர்கள், தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் வசனங்களுக்கு ஏற்றவாறு நடித்து, அந்த வீடியோக்களை வெளயீட்டுக் கொண்டு வருகின்றனர்.
- Advertisement -
அண்மைக்காலமாக டிஃட்டோக் செயலியின் மூலம் அறிமுகமாகி காதல் வயப்பட்டு வெளிநாட்டு இளைஞர்கள், அங்கிள்கள் பெருந்தொகையான பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர்.
- Advertisement -
அதே போல் யுவதிகளும் கணிசமான முறையில் தங்களது அந்தரங்க புகைப்படங்களை இது போன்ற நபர்களிடம் பகிர்ந்து சிக்கலில் மாட்டியுள்ளனர். தற்போது வெளிநாட்டு மாப்பிளையை திருமணம் செய்வதற்காக தங்களது புகைப்படங்கள், விடீயோக்களை டிஃட்டோக் செயலியின் பொது வெளியில் பகிர்ந்து வருகின்றனர்.
இதில் ஒரு சில திருமணங்களே வெற்றியாக முடிந்துள்ளது. மீதி அனைத்தும் இரு பக்க தரப்பினருக்கும் பிரச்சினைகளையும் அவமானங்களையும் ஏற்படுத்தி , சுய கௌரவங்களை இழக்கின்றனர்.
ஆகவே வாழ்க்கை துணையை தேர்தெடுப்பதற்கு இது சிறந்தமுறை இல்லை என்பதை யுவதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.