இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர் “இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டுக்குள் இலங்கை தமிழர்களின் நிலம், வீடு மற்றும் விவசாயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அப்போது 1983ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்த “ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நினைவு கூர்ந்த விக்ரமசிங்க, 75வது சுதந்திர தினத்திலாவது அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம்” என்றும் தெரிவித்துள்ளார்.