கொட்டாவை மற்றும் புறக்கோட்டைக்கு இடையிலான 138 வழித்தடத்தில் மூன்று பஸ் சேவைகள் இன்று இலவசமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொட்டாவை சமன்புர பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான மூன்று பஸ் சேவைகளே இவ்வாறு இலவசமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்று வருடங்களுக்கு முன் உயிரிழந்த தனது தாயின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த நபர் இந்த இலவச பஸ் சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.