கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அமிஷ், ஆதிஷ் என மகள், மகன் இருந்தனர்.
- Advertisement -
இந்த நால்வர் மற்றும் மணிகுட்டனின் மாமியார் தேவகி ஆகியோர் நேற்று காலை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மணிகுட்டன் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்ற நால்வரும் விஷம் குடித்தும் இறந்து கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஹொட்டல் நடத்தி வந்த மணிகுட்டனுக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பண நெருக்கடியில் இருந்து வந்திருக்கிறார்.
மணிகுட்டன் பலரிடம் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. கடன் அதிகமானதால் அவர் மன உளைச்சலில் குடும்பத்தார் இருந்த நிலையில் அனைவருக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு மணிகுட்டன் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கேரள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.