அன்புக்குரிய என் இனமே, காசு பத்திரம்.பொருளாதாரத்தில் கவனம் தேவை.ஊருக்கும் உறவுகளுக்கும் அதிகளவில் பகிருங்கள்.இது பொருளாதார யுத்தம் ஆகவே எங்கள் பக்கம் இழப்புகளைக் குறைக்கவேண்டும்.FD நிலையான வைப்பு க்கான வட்டி 20%.இலங்கையின் பணவீக்கம் 74%.
- Advertisement -
Fixed Deposit எனும் நிலையான வைப்பில் நீங்கள் இப்போது பணத்தை வைப்பிலிடுவது வெறும் நட்டம்.இலங்கை ரூபாவின் விலை சடுதியாக வீழ்ந்துவருகிறது. அதிகளவான பணத்தை நிலையானவைப்பில் வைத்திருந்தால் தயவுசெய்து அவற்றுக்கு நிலத்தை வாங்குங்கள் அல்லது தங்கத்தை வாங்குங்கள் அல்லது வெளிநாட்டு பணத்தை வாங்குங்கள்.
- Advertisement -
வெளிநாடுகளில் இருந்து வரும்போது கண்டகண்ட இடங்களிலும் டொலர்களை ரூபாய்க்களாக மாற்றுவதற்குப்பதிலாக உங்கள் சொந்தக்காரரிடம் உங்கள் செலவுக்கான ரூபாயை வாங்கி அவர்களுக்கு டொலர்களை கொடுங்கள்.எந்தச்சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் காணிகளை இப்போதைக்குக் விற்காதீர்கள்.
சீதனம் கொடுப்பதாக இருநதாலோ வாங்குவதாக இருந்தாலோ நிலமாக வாங்குங்கள் கொடுங்கள். ஓரளவு பணம் கையில் இருக்கிறது. அளவான தோட்டக்காணி இருக்கிறது என்றால் தைரியமாகப்பயிரிடுங்கள்.உங்கள் பணம் நிலையான வைப்பதில் இடப்படுவது நாடு இருக்கும் நிலையில் நல்லது அல்ல ஆபத்தானது.
கடன் வாங்குவதாக இருந்தால் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி உடனடியாக காணி அல்லது தங்கத்தில் முதலிடுங்கள். ஒருகோடி இலங்கை ரூபாய் ஒன்றுக்கும் உதவாமல் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.