நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
இதனால் இன்று மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.