வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சேவை 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படுமெனவும் விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
- Advertisement -
மேலும் இதற்காக விமான நிலையத்தில் கொவிட்-19 தடுப்பூசி மையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.