நாமலின் மறுப்பு
கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தாம் அங்கத்துவம் பெற்றுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்தொடர்பும் இல்லை என்றும், தன்னைப் போன்ற பெயரில் வேறு சிலரும் இருக்கலாம், ஆனால் அது கண்டிப்பாக தான் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
- Advertisement -
வெளியான போலி செய்திகள்
இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,
அதில் நாமல் ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டதை அடுத்தே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்,