இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நாடு திரும்பும் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லையாயின், அவர்கள் இலங்கையில் எந்த பாகத்திற்கும் சுற்றுலா மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
- Advertisement -
எனினும், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7 ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில், அவர்கள் மீண்டும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து சுற்றுலாப் பயணிகளும், இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனையில், கொவிட்-19 தொற்று உறுதியாகி இருக்கவில்லை என்பதையும், ஆவணம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.