யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
யாழ். போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதிகளாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரு விடுதிகளிலும் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்.
மேலும் யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கும் 5 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாக 5 படுக்கைகளே காணப்படுகிறன.
எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.