வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்று பரவலடைந்து வரும் நிலையில் நகரில் அமைந்துள்ள உணவகங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரபிரிவினர்களால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.
- Advertisement -
இந்நிலையில் வவுனியா உணவகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும், சுகாதாரநடைமுறைகள் தொடர்பாக சுகாதாரபரிசோதகர்களால் இன்று மேற்பார்வை செய்யப்பட்டது.
இதன்போது ஒவ்வொருவருக்கும் இடையில் சமூகஇடைவெளிகள் இறுக்கமாக பேணப்படவேண்டும் என்று உணவக உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிபந்தனைகளை மீறுபவர்களிற்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.