இலங்கைக்குத் தேவையான மருந்து பொருட்களில் அதிகளவானவை இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிலையில் இந்தியா கொரோனா பரவல் காரணமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்படாது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியாத மருந்துகளை சீன நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.