யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் ஒன்று புதுக்குடியிருப்பில் சிக்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து உருக்கப்பட்ட தங்கம், நகைகள் உட்பட்ட 150 பவுணுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன் பெறுமதிவாய்ந்த பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
- Advertisement -
இது குறித்த அறிவிப்பை வெளியிடும் ஊடகவியலளார் சந்திப்பு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என்றும் அவர்களில் பெண்கள் இருவரும் ஆண்கள் மூவரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைதானவர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.