கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 1 மாதம் நிறைவடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -
சிங்கப்பூர் நிபுணர் குழுவொன்று, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த சுமார் 30பேரினுடைய குருதி மாதிரியை பெற்று, ஆய்வினை மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போதே அவர்கள் அனைவருக்கும், குருதி உறைதல் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.