கம்பளை கஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதனை காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -
புலனாய்வு பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட தகவலொன்றுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளைஞனின் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.