கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இன்று (ஏப்ரல் 29) 22 கிளைகளையும் சேவை மையங்களையும் மூடுவதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் வங்கி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதை அறிவித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் கெப்பட்டிபொலகிளை, கொழும்பு மாவட்டத்தின் கட்டுபெத கிளை,சொய்சாபுர சேவை நிலையம், நாவலசேவை நிலையம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குடுவெல்ல கிளை, ஹம்பாந்தோட்டை கிளை, சயுறுபாய சேவை நிலையம், கம்பகா மாவட்டத்தில் கொடதெனியாவ சேவை நிலையம்,
- Advertisement -
கண்டி மாவட்டத்தில் பிலிமதலாவ கிளை, ஹதரலியத்த கிளை, கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன் கிளை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்பல கிளை, மாக்கந்துரை கிளை, கொபெய்கனே கிளை, நிக்கரவட்டிய கிளை, பிங்கிரிய கிளை, கொலுவெவ சேவை நிலையம், கட்டுபொத சேவை நிலையம், பன்னல சேவை நிலையம்,
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிளை, முள்ளிப்பொத்தானை சேவை நிலையம், மாத்தறை மாவட்டத்தில் கண்டற கிளை ஆகியனவே மூடப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கை வங்கியும் தனது 23 கிளைகளை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.