தமிழ் – சிங்களப் புத்தாண்டுக் காலப் பகுதிக்கு பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹஷித்த அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது 150 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், புத்தாண்டுக்கு முன்னர் சேர்க்கப்பட்டவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் எனவும் அவர் கூறினார்.
- Advertisement -
எனினும், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்க்கும் எண்ணிக்கை, கடந்த காலங்களை விடவும் தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, செயற்படுவது அத்தியாவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.