மஹரகம நகர சபையின் கர்ப்பிணிப் பெண் உறுப்பினர் ஒருவரை தாக்கியமை தொடர்பில், நகர சபையின் மற்றுமொரு பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மஹரகம நகரசபையின் பெண் உறுப்பினர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் மற்றுமொரு பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர்களிருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக சந்தேக நபரான பெண் உறுப்பினர் தன்னை தாக்கி தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ள கர்ப்பிணியான குறித்த பெண் உறுப்பினர், தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மற்றுமொரு பெண் உறுப்பினரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.