உயிருடன் உள்ள ஒருவரை இறந்துவிட்டார் என்று தீர்மானித்து சவக்கிடங்கிற்கு அனுப்பிய நீர்கொழும்பு வைத்தியசாலையின் மருத்துவர் தற்காலிகமாக புத்தளம் பொது மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் லால் பனாபிட்டிய இதை தெரிவித்துள்ளார்.மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
- Advertisement -
அத்தோடு இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு வைத்தியசாலை நடத்திய விசாரணையின் அறிக்கை கடந்த வாரம் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது அமைச்சின் பொறுப்பாகுமென்று நீர்கொழும்பு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நிர்மலா லோகநாதன் தெரிவித்தார்.
மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த ஒரு நோயாளி இறந்து விட்டதாக கூறி சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.