மட்டக்களப்பு தேசம் துண்டாடப்பட்டு வைர விழா காணும் நாள் சித்திரை மாதம் 10 ஆம் திகதி ஆகும்.
- Advertisement -
வடக்கே வெருகல் ஆறு முதல் தெற்கே குமுக்கன் ஆறு வரையிலான பெரு நிலப்பரப்பே மட்டக்களப்பு தேசம் (திருகோணமலை முதல் கதிர்காமம் வரை என்பர் சில ஆய்வாளர்கள்) 1628ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு தேசத்தின் தலைநகரமாக இருந்த சம்மாந்துறை போர்த்துக்கீசர் வருகையுடன் புளியந்தீவிற்கு மாற்றப்படுகிறது.
- Advertisement -

மட்டக்களப்பு தேசம் 1950 ஆம் ஆண்டுகளில் பாணமைப்பற்று¸ நடன நடுக்காட்டுப்பற்று¸ சம்மாந்துறப்பற்று¸ அக்கரைப்பற்று¸ நிந்தவூர்-கரைவாகுப்பற்று¸ விந்தனைப்பற்று¸ மண்முனை வடக்கு¸ போரதீவு – மண்முனை தெற்கு – எருவில்பற்று¸ஏறாவூர்- கோறளைப்பற்று ¸என ஒன்பது பிரதேச இறைவரி அலுவலர் பிரிவுகளாக(Divisional Revenue Officer Divisions) நிர்வாகம் செய்யப்பட்டது.
10.04.1961 இல் மட்டக்களப்பு தேசத்தின் தெற்கிலிருந்து பாணமைப்பற்று¸ நடன நடுக்காட்டுப்பற்று¸ சம்மாந்துறைப்பற்று¸ அக்கரைப்பற்று¸ கரைவாகுப்பற்று¸ விந்தனைப்பற்று ஆகிய ஆறு பற்றுக்களும் ‘அம்பாறை’ எனும் புதிய மாவட்டமாக உருவெடுக்கிறது. தற்போது இவை பாணமைப்பற்று – லகுகல¸ பொத்துவில்¸ நடன நடுக்காட்டுப்பற்று – அம்பாறை¸ தமண¸ உகன சம்மாந்துறப்பற்று – சம்மாந்துறை¸ இறக்காமம்¸ நிந்தவூர்¸ அக்கரைப்பற்று – அக்கரைப்பற்று¸ அட்டாளைச்சேனை¸ ஆலையடிவேம்பு¸ திருக்கோவில்¸ கரைவாகுப்பற்று – நாவிதன்வெளி¸ காரைதீவு ¸ கல்முனை தழிழ்¸ கல்முனை முஸ்லிம்¸சாய்ந்தமருது¸ விந்தனைப்பற்று – பதியத்தலாவ (விந்தனை மேற்கு) லகுகல (விந்தனை கிழக்கு) என பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நடன நடுக்காட்டுப்பற்று தற்போது’வேவகம்பற்று’ என அழைக்கப்படுகிறது. எஞ்சிய தென்பகுதியே தற்போது மட்டக்களப்பு மாவட்டம் இது போரதீவுப்பற்று¸ எருவில்பற்று¸ மண்முனைப்பற்று¸ கரைவெட்டிப்பற்று¸ ஏறாவூர்ப்பற்று¸கோறளைப்பற்று ஆகிய ஆறு பற்றுக்களைக் கொண்டுள்ளது.

மண்முனை வடக்கு பிரிவு – மண்முனை வடக்கு (மட்டக்களப்பு ) வவுணதீவு( மண்முனைமேற்கு )¸ காத்தான்குடி¸ ஆரையம்பதி(மண்முனை) எனவும், போரதீவு -மண்முனை தெற்கு – எருவில்பற்று பிரிவு களுவாஞ்சிக்குடி(மண்முனை தெற்கு – எருவில்பற்று) ¸ வெல்லாவெளி (மண்முனை தெற்கு ) ¸ பட்டிப்பளை(மண்முனை தெ ன்- மேற்கு) எனவும், ஏறாவூர்- கோறளைப்பற்று பிரிவு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி)¸ கோறளைப்பற்று (வாழைச்சேனை)¸ கோறளைப்பற்று வடக்கு (வாகரை)¸ ஏறாவூர் நகர்¸ கோறளைப்பற்று மேற்கு (ஓட்டைமாவடி)¸ கோறளைப்பற்று தெற்கு (கிரான்)¸ கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை முஸ்லிம்) எனவும் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளாக நிர்வாகம் செய்யப்படுகிறது.
கோறளைப்பற்று தெற்கு (கிரான்)¸ கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை முஸ்லிம்) ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளும் வர்த்தமானி அறிவித்தலின்றியே இயங்குகின்றன. இதில் கரைவெட்டிப்பற்று என்பது கரைவெட்டி என ஓர் ஊராக அடையாளப்படுத்தப்படுகிறது அதன் பெயரில் நிர்வாக அலகு கிடையாது. ஏறாவூர் என்பதும் ஊரின் பெயராக மாறியுள்ளது. மட்டக்களப்பும் நகரத்தின் பெயராக கொள்ளப்படுகிறது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவோ பற்றின் பெயரின்றியே அழைக்கப்படுகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தொன்மைப் பெயர்கள் வழக்கொழியும் போது வரலாறும் மாற்றப்படும் என மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.