கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் 309 பேர் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் கடந்த ஆண்டு புதுவருட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 39 வீதம் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

அத்துடன் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் கடந்த 48 மணித்தியாலங்களில் 309 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு புதுவருட பண்டிகை காலத்தில் விபத்து தொடர்பில் 188 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை , இந்த வருடம் பண்டிகை நாட்களில் விபத்துகளில் 77 வீதி விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வன்முறைகளில் காயமடைந்துள்ள 38 பேரும், பட்டாசு வெடிப்பு காரணமாக காயமடைந்துள்ள நால்வரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நான்கு சம்பவங்களும் அலட்சியம் காரணமாக ஏறப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரதிப் ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.