வயலுக்குள் குடைசாய்ந்த கொகுசு வான்! ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.
- Advertisement -

கொழும்பில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பயணித்த வானின் டயர் வெடித்ததில் வான் குடைசாய்ந்து, அருகில் உள்ள வயலுக்குள் வீசப்பட்டுள்ளது.
- Advertisement -
வான் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அதில் பயணித்த இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.