உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
- Advertisement -
கால்வாயில் சடலமொன்று இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
குறித்த சடலமானது சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்க நபர் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குறித்த சடலமானது கொலை செய்யப்பட்ட பின்னர் கால்வாயில் வீசப்பட்டதா? அல்லது இயற்கையான மரணமா? என பொலிஸார் பலகோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.