உப பொலிஸ் பரிசோதகரின் சீருடையை மோசடி செய்த ஒருவர் பன்னிபிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சீருடையைப் பயன்படுத்தி சந்தேகநபர் பல்வேறு வணிக நடவடிக்கைகள் மற்றும் பிற மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் இறக்குவானை பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -

இந்த நபர் உப பொலிஸ் பரிசோதகரின் சீருடையுடன் சமூக ஊடகங்களிலும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இவர் கைது செய்யப்பட்ட போது போலியான பொலிஸ் அடையாள அட்டையும் வைத்திருந்தார். இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.