புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் விரைவாக முடிவுகளை மேற்கொள்ளாது என அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
- Advertisement -
தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு தடை விதிக்கும் தீர்மானம் தொடர்பில் எந்த முடிவும் விரைவாக எடுக்கப்பட மாட்டாது. தற்சமயம் அந்த விடயம் பரிசீலனையில் உள்ளது. எவ்வாறெனினும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, அனைவரது ஒருமித்த கருத்துக்களின் பின்னரே அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
- Advertisement -

அதேநேரம் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கையொப்பமிட்ட அமைச்சரவை பத்திரமும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.