கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போடும் வரை கொரோனா தொற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களும் சுகாதார கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.