மொரகாஹென – கோனபொல பகுதியில் 1 கிலோ 268 கிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘அசித’என்று அழைக்கப்படும் ராஜகல்கொடகே சுகத் குமார என்பவரால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் குழுவில் இவர் நீண்டகாலமாக இருந்தவர் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.