எதிர்வரும் ஜுன் மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுமென்பதால் அந்த மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை பிற்போடுவது உகந்ததல்ல என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை உள்ளூராட்சிசபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 340 சபைகளில் 200ற்கும் மேற்பட்ட சபைகளின் ஆட்சியை ஆளும் பொதுஜன பெரமுன பிடித்தது. அதேபோன்று இம்முறையும் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆளும் கட்சி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.