யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து, இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- Advertisement -

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் வயது-22 என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.