இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டனர்.
- Advertisement -

இதன்போது ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படாது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை முன்னிலைப்படுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதிக்கான போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்கார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.