தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்களில் 3,250 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறுமணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 3,307 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3,250 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- Advertisement -
வார இறுதி நாட்களின் போது ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.