சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்தும் மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த. உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படவுள்ளன.
இது குறித்த தீர்மானம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டின் கல்வி முறையை சீர்திருத்துவதற்கான நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மாணவர்களுக்கு ஒன்பது மாதங்கள் வரை மிச்சமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தவும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.