கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டவுடன் சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக அறிவிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரு இடம் அடையாளம் காணப்பட்டு, அடக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரிகள் இறுதி செய்யும் வரை முடிவை நடைமுறைப்படுத்துவது தாமதமாகும்.
கொவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது