வவுனியாவில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- Advertisement -

வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் கஞ்சாப் பொதிகளுடன் இருவர் வெவ்வேறு பகுதிளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் கைது செய்யபட்ட 16 வயது மதிக்கதக்க இளைஞனிடமிருந்து 3 கிலோ 85 கிராம் கஞ்சாவினையும்,
- Advertisement -
61 வயது மதிக்கத்தக்க முதியவரிடம் இருந்து1 கிலோ 890 கிராம் கஞ்சாவினையும் வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.