தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தில் அமானுஷ்ய சக்தியை விரட்டுவதற்காக பிரம்பு தாக்குதல் மேற்கொண்டமைrtயினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தோஷம் நீக்குவதாக கூறி சிறுமிக்கு 5 மணி நேரம் பிரம்பினால் தாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் தோஷத்தை விரட்டிய பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்கொட, மீகஹவத்த, கதுபொட பிரதேசத்தை சேர்ந்த பாத்திமான ரிப்கா என்ற 9 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சிறுமிக்கு அமானுஷ்ய சக்தியை (பிசுாசு விரட்டுவதாக) விரட்டுவதாக கூறி தாய் அவரை அழைத்து சென்றுள்ளார்.
முதலாவதாக எண்ணை பூசும் நடவடிக்கை ஒன்று மெற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் சிறுமிக்கு அமானுஷ்ய சக்தியை விரட்ட வேண்டும் கூறி பிரம்புகள் உடையும் வரை தாக்கியுள்ளனர்.
பிற்பகல் ஒன்றரை மணியில் இருந்து மாலை 6 மணி வரை சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை தாக்கியமையினால் உடைந்த பிரம்புகளின் துண்டுகள் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான சிறுமி மயக்கமடைந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலை அனுமதிக்கும் போதே சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மகளுக்கு எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. மகள் மிகவும் நல்ல நிலையிலேயே இருந்தார். என்னை அடிக்க வேண்டாம் என்டி என மகள் கூச்சலிட்டுள்ளார். எனினும் மகள் உயிரிழக்கும் வரை அடித்துள்ளார்கள் என உயிரிழந்த சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.