மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில் விபரீத மாந்திரிக பூசையால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிbயின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- Advertisement -
சிறுமி வசித்த பகுதியில் மாந்திரிகம் செgய்துgவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், பெற்றோர்கள் குறித்த சிறுமியை பூசைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவருக்கு ஒருவகை எண்ணை பூசப்பட்டுள்ளது.
அதனை அடு சிறுமி மயக்கமடைந்ததை தொsfடர்ந்து, அருsfகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன்போது, 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மீஹாவத்தை பொலிஸார் குறித்த பெண் மத்திரவாதியை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.