HomeNewsமுல்லைத்தீவில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் - புகைப்படம் எடுத்தும் மிரட்டல்

முல்லைத்தீவில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – புகைப்படம் எடுத்தும் மிரட்டல்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை இன உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய சம்பவம் நேற்று(27) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

தமது விவசாய நிலங்களை துப்பரவு செய்த கிராம வாசியை பௌத்த தேரர் ஒருவர் அச்சுறுத்தி பொலிஸாரை அழைத்து தடை விதித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் அவ்விடத்துக்கு குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ளார்.

அங்கு நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிடல் செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த முள்ளியவளை வட்டார மேலதிக வன அதிகாரி ரணசிங்க என்பவர் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததோடு சக வன அதிகாரி இந்திரஜித் என்பவரோடு இணைந்து ஊடகவியலாளரிடம் பெயர் விலாசம் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டு விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த குறித்த ஊடகவியலாளர் தான் பத்திரிகையாளர் என்ற தனது அடையாளத்தை உறுதிப் படுத்தியதோடு, வீதியில் நின்று கடமையில் ஈடுபடும் தன்னை வன திணைக்கள அதிகாரி புகைப்படம் எடுப்பதும் விபரங்களை கேட்டு பதிவதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் நான் வீதியில் நின்றே கடமை செய்கின்றேன், நீங்கள் வன திணைக்களம் ஏன் என்னிடம் இவ்வாறு தகவல் கேட்கின்றீர்கள், நான் வன பகுதிக்குள் எங்கும் நுழைந்து செய்தி சேகரிக்கவில்லையே எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments