காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தாய் உயிரிழப்பு!

காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிப் போராடிய தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தாயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் தாய் கலந்து கொண்டு தனது மகனை மீட்டுத் தரக் கோரி போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காgணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *