பேராதெனிய – பண்டாரநாயக்க குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தைக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி குறித்த பெண் குழந்தைக்கு 4 மாத ஊசி போடப்பட்டுள்ளது.
- Advertisement -

இதையடுத்து குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பண்டாரநாயக்க குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகி உள்ளது. கண்டி – நுகவெல பகுதியில் உள்ள குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.