வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
- Advertisement -
அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்காதமையால் அந்த தீர்மானம் தொடர்ந்தும் வலுவில் உள்ளது என்பதாகவே நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியில் – ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா? என் குறிப்பிட்டார்.
உதய கம்மன்பில – பாதுகாப்பை அவ்வாறே பேணுமாறு ஜனாதிபதி கூறியிருக்கின்றமையால் இது ஒரு பிரச்சினையாக மாற்றமடையாது என்றார்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தீவுகளின் இருப்பிடங்களில் ஒன்று ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருப்பதால் இந்த திட்டத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது, அங்கிருந்து சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது.
இந்த திட்டத்திற்காக டெண்டர் வழங்கிய இந்திய நிறுவனத்தை விட சீன நிறுவனம் சிறந்த தகுதி வாய்ந்தது என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஒப்பந்தத்தை அனுமதித்து என்றும் இலங்கை அரசு குறிப்பிட்டது. எனினும், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருக்கவில்லை.
இந்தியாவின் ஆட்சேபனை இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக ஆளுந்தரப்பின் ஒரு தரப்பினர் அழுத்தங்கொடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.