
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை தொடர்பில் எந்தவித கருத்தையும் தற்போது வெளியிட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் மொழிபெயர்ப்பு தற்போது அச்சிடப்பட்டு வருவதுடன், எதிர்வரும் காலங்களில் இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அறியவருகிறது.