ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் டி யு . குணசேகர மற்றும் திஸ்ஸவிதாரண உட்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனது இல்லத்தில் கலந்துரையாடல்களை அண்மையில் நடத்தியுள்ளார்.
- Advertisement -

இந்த கலந்துரையாடலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் றோகண ஸக்ஸ்மன் பியதாச மட்டுமே கலந்து கொண்டுள்ளதுடன் தற்போதைய பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றும் அரசியல் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாசிறி ஜயசேகர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இதன் ஒரு கட்டமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் மீதான ஒழுங்கு விசாரணையை சீர் குலைக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.