தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன், மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.
- Advertisement -
இந்நிலையில் விரைவில் பீஸ்ட் படத்தின் தலைப்பு மாற்றப்பட பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், தமிழக அரசு விரைவில், தமிழ் திரைப்படங்களுக்கான 8% விழுக்காடு வரிவிளக்கை தள்ளுபடி செய்வுள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
ஆனால், தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாம். இதனால், ஆங்கிலத்தில், பீஸ்ட் என தலைப்பு வைத்திருக்கும் படக்குழு விரைவில், பீஸ்ட் எனும் தலைப்பை மாற்ற பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
பீஸ்ட் படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து அப்டேட்டை பார்த்தோம். அதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் இதோ.. இப்படத்தில் மூன்று வில்லன்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிக்கவிருக்கும், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, முன்னணி இயக்குனர் மிஸ்கின் தானாம்.
ஆனால், அவர் தற்போது, பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருப்பதினால், பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லயாம். இதன்பின், தான் இயக்குனர் செல்வராகவனை படக்குழு அணுகியதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.