தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
- Advertisement -
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
- Advertisement -
மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது, இதில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் என்பதால் அன்று பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படக்குழு அக்டோபர் மாதத்திற்கு முன்னே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.