தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- Advertisement -
முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- Advertisement -
இந்நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பில், தளபதி விஜய்யை சந்திக்க, இசையமைப்பாளர் அனிருத் சென்றுள்ளார். அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..