மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கக்கூடிய மந்தநிலை நீங்கும்.
ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்த முடிவுகள் மறு ஆலோசனை செய்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
- Advertisement -
மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் அமைதி உண்டாகும்.
சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற நான் எதுவும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரம் பிறக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.
கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்க கூடிய மன தைரியம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியாக முன்னேற்றம் சிறப்பாக அமையும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். –
துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக் கவலைகள் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத வீண்பழி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும் அதன்மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதற்கு நேர்மாறாக நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய வகை சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தலைவலி மற்றும் டென்ஷன் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் படைக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பயணங்களின் மூலம் அற்புதமான பலன்களை காணலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும்.
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். புதிய பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி முன்னேற்ற பாதைக்கு வழி கிடைக்கும். மன அமைதிக்கு தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வேலையில் வெற்றிகள் உண்டாகும்.
மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் தொடர்ந்து இடையூறுகள் நீடிக்கும். புதிய யுக்திகளை கையாளுவதால் முன்னேற்றம் காணலாம்.