ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதை தடை விதிக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
- Advertisement -
உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை கொண்ட ஜி 7 கூட்டமைப்பின் 48ஆவது மாநாடு நேற்று தொடங்கியுள்ளது.
- Advertisement -
ஜெர்மனியில் உள்ள ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகியிருந்த நிலையில் 2 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக உள்ள தங்கத்தின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
நேற்று ஜி 7 மாநாடு தொடங்கும் முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
அவற்றினை பின்பற்றி ஜெர்மனியும், இதர ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் தங்கத்துக்கு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை கச்சா எண்ணெய், எரிவாயுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு பல இலட்சம் கோடிக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.