பாகிஸ்தானை சேர்ந்த 35 வயதான இளைஞன் ஒருவர் தன்னைவிட இரண்டு மடங்கு வயதான -70 வயதான- கனடா மூதாட்டி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானின் குஜராதை சேர்ந்த நயீம் ஷாஜாத் என்ற இளைஞன், கனடா பாட்டியுடன் பேஸ்புக் மூலம் காதலை வளர்த்துள்ளார்.
- Advertisement -

பேஸ்புக்கில் சாதாரணமாக நண்பர்களாகி, பேஸ்புக் காதலர்களாகி, தற்போது தம்பதியர்களாகி விட்டனர். 2017ம் ஆண்டு இருவரும் பேஸ்புக்கில் அறிமுகமானார்கள்.
- Advertisement -
விரைவில், தமக்கிடையில் ஏற்பட்பட்டுள்ளது தெய்வீக காதல் என்பனை உணர்ந்து, வயது மரபுகளை மீறி, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கணிசமான வயது வித்தியாசம் இருந்தபோதிலும், நயீமின் அசைக்க முடியாத காதல், அவரது மனதைக் கவர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வழிவகுத்தது.நயீமுடன் திருமணம் செய்து கொள்வதற்காக கனடா மூதாட்டி பாகிஸ்தானுக்கு வந்தார்.

நயீமின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்த்ததாகவும், நயீம் காதலில் உறுதியாக இருந்ததையடுத்து, திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை, கனடாவுக்கு குடிபெயர்வதற்காக நயீம் இந்த திருமண உத்தியை கையாள்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது